இந்திய அணி வெற்றி பெறுமா? 307 ரன்கள் இலக்குடன் களமிறங்கும் நியூசிலாந்து அணி..! விறுவிறுப்பான போட்டி!

0
Will the Indian team win The New Zealand team will enter the field with a target of 307 runs Fierce competition-India VS Newzealand One Day Match

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி ஆக்லாந்தில் உள்ள ஈடன்பார்க்கில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டியில் முதலில் டாஸ்க் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இந்நிலையில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தியது. 20 ஓவர் தொடருக்கான இந்திய அணியை ஹர்திக் பாண்ட்யா வழிநடத்தினார். ஒரு நாள் போட்டி அணிக்கு கேப்டனாக ஷிகர் தவான் செயல்பட உள்ளார். ரோகித் சர்மா, விராட் கோலி, ஹர்திக் பாண்ட்யா, லோகேஷ் ராகுல், பும்ரா, முகமது ஷமி உள்ளிட்ட மூத்த வீரர்கள் இல்லாத நிலையில் அதிகமான இளம் வீரர்களுடன் இந்தியா களம் இறங்கியது.

இதில் இந்திய அணியின் வீரரான ஷிகர் தவானும் சுப்மான் கில்லும் முதலில் களமிறங்கினர். இவர்கள் இருவரும் நிதானமாக ஆட்டத்தை வெளிபடுத்தினர். இந்நிலையில், ஷிகர் தவான் 72 ரன்களிலும், சுப்மான் கில் 50 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 50 ஓவர்களில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 306 ரன்களை எடுத்து இந்திய அணி சிறப்பாக விளையாடியது. 307 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெதர்லாந்து அணி களமிறங்கியுள்ளது.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here