ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. இந்தவகையில், இந்த வருடம் ஜனவரி மாதத்தில் நான்கு சதவீதம் வரையிலும் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது. இந்நிலையில். ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வினை எதிர்பார்த்த நிலையில் ஆகஸ்ட் மாதமே முடிவடைய இருக்கிறது. தற்போது வரையிலும் அகவிலைப்படி உயர்வு குறித்தான எந்தவித அறிவிப்புகளும் வெளியாகவில்லை என்று மத்திய அரசு உழியர்கள் கவலையில் உள்ளனர்.
மேலும், நம் நாட்டில் பணம் பற்றாக்குறை தொடர்ந்து அதிகரித்து வருவதன் காரணமாக மத்திய அரசு ஊழியர்களுக்கு மூன்று சதவீதம் மட்டுமே அகவிலைப்படி உயர்வு கிடைக்கும் என்று தகவல் அவ்வப்போது வெளியாகி வருகிறது. அதன்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கு வரும் செப்டம்பர் மாதம் முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆயிலைப்படி உயர்வு அறிவிக்கப்படும் என தகவல் கிடைத்திருக்கிறது.
Also Read : மதுரை ரயிலில் திடீர் தீ விபத்து..! 9 பேர் பலி… ஏராளமானோர் படுகாயம்!!
அதன்படி , ஃபிட்மென்ட் , ஃபாக்டரும் ஊதியம் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியுடன் கூடுதலாக அதிகரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, தற்போது பெறும் அடிப்படை சம்பளத்தை காட்டிலும் மூன்று மடங்கு வரை ஊதிய உயர்வு மத்திய அரசு ஊழியர்களுக்கு கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது.