என்னது இனிமே காலாண்டு, அரையாண்டு தேர்வுக்கும் பொது வினாத்தாள்களா..? பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட புதிய அறிவிப்பு!!

காலாண்டு தேர்வுக்கான பொதுவினாத்தாள் தமிழகம் முழுவதும் உள்ள 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை முறை அறிமுகம் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆண்டு இறுதியில் மட்டுமல்லாமல் மாணவர்களுக்கு எல்லா தேர்வும் பொது தேர்வு போலவே நடைபெற உள்ளது.

அதன்படி, 2023 – 24 ஆம் கல்வியாண்டிற்கான காலாண்டுத் தேர்வு செப்டம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் தொடங்கி 27ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு, 11ஆம், 12ம் வகுப்புகளுக்கு செப்டம்பர் 15 ஆம் தேதியும், 6 முதல் 10ஆம் வகுப்புகளுக்கு செப்டம்பர் 18 ஆம் தேதியும் காலாண்டு தேர்வுகள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Will there be general question papers for the quarterly and half yearly exams The new notification issued by the Department of School Education see here

இந்நிலையில், செப்டம்பர் 27ஆம் தேதி தேர்வுகள் நிறைவடைந்த பின் 28 ஆம் தேதி முதல் அக்டோபர் 2 ம் தேதி வரை காலாண்டு விடுமுறை விடப்படும். காலாண்டு விடுமுறை முடிந்து அக்டோபர் 3 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.

Also Read : தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் 8 கி.மீ தூரத்திற்கு நடைபாதை..! அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட புதிய அறிவிப்பு!!

இந்நிலையில், காலாண்டு, அரையாண்டு, திருப்புதல் தேர்வுகளுக்கு பொது வினாத்தாள்கள் 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டில் இருந்து வழங்க தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், இந்த திட்டமானது 12 மாவட்டங்களில் சோதனை அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.