திருப்பதியில் நீங்களும் வி.ஐ.பி தரிசனம் செய்யனுமா? “ஸ்ரீ ராம ஜெயம்” மாதிரி “கோவிந்தா” என எழுதிட்டு வந்தாலே போதுமாம்!

Today Latest News in Tamil 2023

Today Latest News in Tamil 2023

திருமலை திருப்பதிக்கு தரிசனம் காண ஏராளமான மக்கள் அனுதினமும் சென்று வருகிறார்கள். மேலும், இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மற்றும் அக்டோபர் மாதங்களில் பிரமோற்சவம் புரட்டாசி மாதத்தில் வருகிறது. இதனால் கூட்டம் அலைமோதும். எனவே பக்தர்கள் அதிக நேரம் காத்திருக்கும் நிலை ஏற்ப்படும். இதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், திருப்பதி தேவஸ்தானத்தின் புதிய அறங்காவலர் குழுவின் முதல் கூட்டம் தலைவர் கருணாகர ரெட்டி தலைமையில் நடந்தது. அதனையடுத்து, அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில்..

Also Read>> என் தலைய சீவ எதுக்கு 10 கோடி? வெறும் 10 ரூபா போதுமே! கொலை மிரட்டல் கொடுத்த சாமியாருக்கு நெத்தியடி பதில் – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

எல்.கே.ஜி. முதல் பட்ட மேற்படிப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு 1 கோடி பகவத் கீதை புத்தகங்களை இலவசமாக வழங்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் திட்டமிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், 25 வயதுக்கு மேல் உள்ள இளைஞர்கள் “ஸ்ரீ ராம ஜெயம்” என்று எழுதுவது போன்று “கோவிந்தா” என்ற நாமத்தை ஒரு கோடி முறை எழுதி வந்தால், அவர்களுக்கு வி.ஐ.பி. தரிசனம் செய்ய அனுமதி கொடுக்கப்படும் என அறிவித்துள்ளது.