புதுசா மின் இணைப்பை பெறனுமா? இனிமே இப்படி தான் பண்ணனும்! தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு…!

Today News in Tamilnadu 2023

Today News in Tamilnadu 2023

தமிழகத்திலே புதிதாக மின்சார இணைப்பு பெறுபவர்களின் எண்ணிக்கையில் 2 லட்சம் பேர் காத்திருக்கிறார்கள். இதனையடுத்து, அரசுக்கு முக்கிய கோரிக்கைகளுக்கு குவிந்த வண்ணமாக உள்ளன. தமிழகத்திலே மின்சார உற்பத்தி செய்வதையும், அதனை விநியோகம் செய்வதையும் மாநில அரசே நடத்துகிறது. இதற்காகவே, தமிழக அரசு மின்சார வாரியம் என்ற அமைப்பை உருவாக்கி அதன் கீழ் 2 விதமான அமைப்புகளை நடத்துகிறது. அதில் ஒன்று தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் (TANTRANSCO) மற்றொன்று, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (TANGEDCO) ஆகும்.

புதுசா, கரண்ட் கனக்சன் வேண்டுமானால் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் ஆகியவை தான் அதற்க்கான வசதிகளை ஏற்படுத்தி தருகிறது. வாடிக்கையாளர்களுக்கு கால அளவு 30 நாட்களுக்குள் மின் இணைப்பை செய்து தந்தது. இந்நிலையில், தமிழ்நாடு மின்சார வாரியம் ஒழுங்குமுறை ஆணையம் சில மாற்றங்களையும், திருந்தங்களையும் கொண்டு வந்தது.

அதன் படி, இணைப்பை பெறவேண்டுமானால், விண்ணப்பித்த 7 நாட்களுக்குள் மின் இணைப்பை செய்து தர வேண்டும். ஒருவேளை, விண்ணப்பித்த 7 நாட்களுக்கு மின் இணைப்பை செய்து தரவில்லை எனில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.100 வீதம் அதிகபட்சமாக ரூ.1000 வரை அபராதம் கொடுக்க வேண்டும் என தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் திருத்தம் செய்யப்போவதாக அப்போதே அறிவிப்பை அறிவித்திருந்தது.

இந்நிலையில், புதிய அறிவிப்பு ஒன்றை மின்சார வாரியம் அறிவித்துள்ளது. புதுசா மின் இணைப்பை பெறவேண்டுமானால், தமிழ்நாடு அரசு மின் வாரிய இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். மேலும், பிரிவு அலுவலகத்தினர் பரிசீலனை செய்து மின் இணைப்பை வழங்குவார்கள் என அறிவித்துள்ளது.

புதிய இணைப்புகளை பெறுவதற்கு சொத்து வரி ரசீது, விற்பனை ஒப்பந்தம் போன்ற அந்த சொத்து விண்ணப்பதாரருடையது தான் என சான்று ஆதாரத்தின் நகல் இருக்க வேண்டும். வீட்டின் உரிமையாளராக விண்ணபதாரர் இல்லை என்றால் வீட்டின் உரிமையாளரிடமிருந்து படிவம் 5 போன்று பெறப்பட்ட கடிதம் அல்லது அந்த வீட்டில் தான் விண்ணபதாரர் வசிக்கிறார் என சான்று படிவம் 6 சமர்ப்பிக்க வேண்டும். ஒருவேளை, விண்ணபதாரருக்கு 112KW மின் அளவு தேவை என்றால் அதற்க்கான விண்ணபங்களை ஸ்கேன் செய்து அதன் PDF ஐ TANGEDCO என்ற இணையதளத்திற்கு சென்று அப்ளை செய்ய வேண்டும்.