சாப்பிட்ட காசு தராங்களா? வெண்ணிலா கபடி குழு சூரியை மிஞ்சிய இளைஞர்கள்!

0

மச்சான்ஸ் என்ற மச்சான்ஸ் கறி உணவகம் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள பொட்டக்கொல்லை கிராமத்தில் இயங்கி வருகிறது. இதனுடைய இரண்டாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு உணவுத்திருவிழா போட்டி நடைபெற்றது. இதில் மாபெரும் பரோட்டா உண்ணும் போட்டி மாலை 7 மணிமுதல் இரவு 9 மணிவரை நடைபெற்றது.

இந்த உணவுத்திருவிழா போட்டியில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டனர். இதில் தனிநபர் ஒருவர் 30 நிமிடங்களில் 10 பரோட்டா சாப்பிட்டால் அவருக்கு உணவகம் சார்பாக 100 ரூபாய் பரிசளிக்கப்படும். போட்டியில் தோற்றவர்கள் சாப்பிட்ட பரோட்டாவுக்கான பணம் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையும் விதித்தனர். முழுமையாக உண்ணப்படும் பரோட்டா மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

இதில் ஏராளமான உணவு பிரியர்கள் கலந்து கொண்டனர். இவர்களில் சூர்யா என்பவர் பத்து புரோட்டா சாப்பிட்டு முதல் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். இந்த போட்டியை காண பல கிராம மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். வெண்ணிலா கபடி குழு படத்தில் சூரி பரோட்டா போட்டியில் கலந்து கொண்டு புரோட்டா சாப்பிட்டதை அங்கு உள்ளவர்கள் சுட்டிக்காட்டி காமெடியாகவே பேசிச் சென்றதை காண முடிந்தது.

கடை உரிமையாளர் தமிழ் மன்னன் இதுகுறித்து கூறுகையில், நாங்கள் இருக்கும் இடம் கிராமம் என்பதால் ஹோட்டலில் சாப்பிட வேண்டும் என்றால் ஜெயங்கொண்டம் அல்லது அரியலூர் தான் செல்ல வேண்டும். இதனால்தான் மக்கள் பயன்படும் அளவில் ஒரு நல்ல ஹோட்டலை துவங்கியுள்ளதாக தெரிவித்தார்.


RECENT POST

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here