தனியார் பள்ளிகளில் பீஸ் கட்டாமல் பிள்ளைகளை படிக்க வைக்கலாம்! எப்படி தெரியுமா?

Without Paying the Fees in Private Schools – Check More Details Here

Without Paying the Fees in Private Schools - Check More Details Here

2009 ஆம் ஆண்டு ஆறு வயது முதல் பதினான்கு வயது வரை உள்ள குழந்தைகளின் கல்வியை அடிப்படை உரிமையாக மாற்றும் வித்தத்தில் மத்திய அரசாங்கம் அனைவருக்கும் கல்வி உரிமை சட்டத்தை கொண்டுவந்தது. இந்த சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகள் அனைத்தும் தங்களுடைய 25 சதவீத இடங்களை குழந்தைகளுடைய இலவச கல்விக்காக கட்டாயம் ஒதுக்க வேண்டும். இந்த 25 சதவீத கல்வி கட்டணத்தை அரசே ஏற்று கொள்ளும்.

ALSO READ > விரைவில் 10,000 பணியிடங்கள் நிரப்பப்படும்… அரசு அறிவித்த முக்கிய அறிவிப்பு!

இந்த சட்டத்தில் தங்களுடைய குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்க விரும்பும் பெற்றோர்களின் வருமானம் வருடத்திற்கு இரண்டு லட்சத்திற்கும் குறைவாக இருத்தல் அவசியம். இச்சட்டத்தின்படி தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் மாணவ மாணவிகளை சேர்ப்பதற்க்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியும். மே மாதம் 18 ஆம் தேதி வரை https://rte.tnschools.gov.in/ என்ற இணையதளத்தில்  விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றிக்கு விண்ணப்பிக்க, மாணவர்களுடைய பிறப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ் உள்ளிட்ட உரிய ஆவணங்களை இணைய பக்கத்தில் பதவிவேற்றம் செய்யப்பட வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட இடங்களைக் காட்டிலும் கூடுதலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு இருப்பின் மே மாதம் 23 ஆம் தேதி அன்று குலுக்கல் நடத்தப்பட்டு மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர்கள்.


TODAY’S GOVERNMENT JOBS 2022:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here