அயோத்தியில் குழந்தை ராமர் சிலையின் அதிசயங்கள்! குழந்தை ராமர் எப்படி உருவானார்?

அயோத்தியில் குழந்தை  ராமர் சிலையின் அதிசயங்கள்

ராமர் கோவில் கருவறையில் உள்ள ஐந்து வயது குழந்தை பருவத்தில் சிரித்த முகத்துடன் உள்ள ராமர் சிலையை இந்த தேசத்து மக்கள் மகிழ்ச்சியுடன் கண்டு வழிபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் தான் அந்த சிலையை பற்றிய ஐந்து சுவாரசியமான தகவல்கள் வெளியாகி உள்ளது.

அயோத்தி ராமர் கோவிலுக்கு என்று கருவறையில் வைப்பதற்காக மூன்று சிலைகள் செய்யப்பட்டனவையாம். அதில் ஐந்து வயது பாலகனான ராமர் சிலை கருவறையில் கடந்த 18 ஆம் தேதி நிறுவப்பட்டது. இந்த சிலை 51 அங்குல உயரமும், 200 கிலோ எடையும் கொண்டது. கர்நாடக மாவட்டம் மைசூரை சேர்ந்த அருண் யோகிராஜ் இந்த சிலையை உருவாக்கினர்.

ALSO READ : 10th, ITI, Diploma படித்தவர்களுக்கு ஒரு அருமையான வாய்ப்பு! தெற்கு ரெயில்வேயில் வேலைக்கான அறிவிப்பு வந்திருக்கு!

மைசூர் மாவட்டத்தில் உள்ள உஜ்ஜே கவுடனபுரா கிராமத்தில் உள்ள பாறையில் இருந்து வெட்டி எடுக்கப்பட்டு பல டன் எடையாக உள்ள கல்லை 200 டன் கொண்ட அழகிய சிலையாக செதுக்கி உள்ளார் சிற்பி அருண் யோகிராஜ். கலை நயமிக்க இந்த சிலை அழகிய வர்ணிப்போடு செதுக்கி உள்ளார். அதற்கு எவ்வளவு தண்ணீர் பால் அபிஷேகம் செய்தாலும் சிலைக்கு எந்த பிரச்சனையும் வராதாம். அந்த சிலையின் அருகில் அவரின் பத்து அவதாரங்களும் சிற்பங்களாக இடம்பெற்று உள்ளன.

மச்சம், கூர்மம், வராகம், நரசிம்மம், வாமனன், பரசுராமன், ராமன், பலராமன், கிருஷ்ணன், கல்கி என சிற்பங்களாக செதுக்கி வைக்கப்பட்டுள்ளன. மேலும் இருபுறமும் பிரம்மனும், ருத்திரனும் சிற்பங்களாக செதுக்கி வைக்கப்பட்டுள்ளன. மற்றொருபுறம் அனுமனும் கம்பிரமான தோற்றத்தில் உள்ளார். ராமர் சிலையை சுற்றிலும் சங்கு, சக்கரம், தாமரை, கதை, பிரணவம், சுவத்திகம் போன்ற சிற்பங்களும் அங்கம் வகிக்கின்றன.

குழந்தை ராமரின் கீழே சூரியன், புதன், சுக்கிரன், குரு, ரகு, கேது, சனி, வெள்ளி, சந்திரன், செவ்வாய் ஆகிய நவகிரக சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சிலையின் மீது சரியாக ராம நவமி அன்று சூரிய ஒளி படும்படி பொறியாளர்கள் கட்டமைத்து உள்ளார்கள். அந்த ஒளி சரியாக மதியம் 12 மணிக்கு ராமரின் நடுநெற்றியில் விழுமாம்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top