சென்னை விமான நிலையத்தில் உலக சாதனை..! இப்படியும் சாதனை படைக்கலாம்!

0
World record at Chennai airport You can read the record like this-A World Record At Chennai Airport

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் விழிப்புணர்வு வார விழா நடைபெற்றது. இதில் மயிலாப்பூர் ரவுண்ட் டேபிள் இந்தியா, மயிலாப்பூர் லேடீஸ் சர்க்கிள் ஆகிய பெண்கள் தன்னார்வ அமைப்பு இணைந்து இந்த விழாவை நடத்தினர். இந்த விழாவில் சென்னை விமான நிலைய இயக்குனர் சரத்குமார், ஆற்காடு நவாப் முகமது ஆசிப் அலி, மத்திய தொழிற்படை போலீஸ் டி.ஐ.ஜி. ஸ்ரீராம் ஆகியோர் கலந்து கொண்டனர். இதற்குமுன், 2,800 உணவு பைகளை வரிசைப்படுத்தியதே உலக சாதனையாக இருந்தது.

இந்நிலையில், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பெண்கள் தன்னார்வ அமைப்பு 3,500 உணவு பைகளை வரிசைப்படுத்தி தற்பொழுது அந்த உலக சாதனையை முறியடித்து புதிய உலக சாதனை படைத்தனர்.

இதனை தொடர்ந்து, வரிசையாக வைக்கப்பட்ட 3,500 உணவு பைகளில் அரிசி, பருப்பு வகைகள், பிஸ்கெட் மற்றும் உப்பு போன்ற மளிகை பொருட்கள் வைக்கப்பட்டிருந்தது. இந்த பைகள் நீண்ட வரிசையில் வரிசையாக வைக்கப்பட்டு உலக சாதனை படைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் உலக சாதனைக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. வரிசையாக வைக்கபப்ட்ட இந்த 3,500 உணவு பைகளும் சென்னை முழுவதும் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட உள்ளதாக பெண்கள் தன்னார்வ அமைப்பு நிர்வாகிகள் தெரிவித்தனர்.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here