சிறுவயது முதல் நம்மில் பலருக்கு தேர்வு என்றாலே கசப்பு தன்மை உடையதாகவே கருதப்படுகிறது. பள்ளி படிப்பில் தொடங்கி கல்லூரி வாழ்க்கை மற்றும் வேலை வழங்குவதற்கு என அனைத்திற்கும் தேர்வுதான் ஒருவரை தீர்மானிக்கப்படுகிறது. இதனால் தான் தேர்வு என்ற சொல் வெறுப்பாக உள்ளது.
ஒவ்வொரு துறையிலும் போட்டி தினந்தோறும் அதிகரித்து வருவதால் அதை கையாள்வது கடினமான ஒன்றாக உள்ளது. இதை சமாளிப்பதற்கு தேர்வு என்ற ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது. அவற்றில் பங்கு பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் அவை கடினமான ஒன்றாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பாடத்திட்டமும் தனித்துவம் வாய்ந்தவை. இதில் போட்டித் தேர்வு என்பது மாணவர்களின் திறமையை வெளிபடுத்தும் ஒரு கருவியாக செயல்படுகிறது. இதுபோன்ற போட்டி தேர்வுகள் மூலம்தான் மாணவர்களின் படிப்பு திறன் மற்றும் நியாபக திறனை அறிந்து கொள்ள முடியும். உலகில் இது போன்ற பல தேர்வுகள் உள்ளன, அதில் தேர்ச்சி பெரும் விண்ணப்பதாரர்கள் பல ஆண்டுகள் அதற்காக கடினமாக உழைக்க வேண்டும்.
மிகக் கடினமான படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு போன்ற போட்டித்தேர்வுகள் கடினமாக நடத்தபடுகிறது என்பது உண்மை தான். உலகில் உள்ள தேர்வுகளில் முதல் 10 கடின தேர்வுகளைப் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
உலகத்திலேயே ரொம்ப கஷ்டமான எக்ஸாம் என்னென்னு தெரியுமா?
1. கௌகா தேர்வு (Gaokao Exam):
Gaokao என்பது சீனாவில் உள்ள ஒரு கல்லூரியில் சேருவதற்காக நடத்தப்படும் தேர்வு ஆகும். இது தான் உலகில் உள்ள கடினமான தேர்வுகளில் முதலாவதாக கருதப்படுகிறது. இந்த தேர்வு தேசிய நுழைவு தேர்வு என்றும் அழைக்கப்படுகிறது. இவற்றின் நேர அளவு சுமார் 9 மணி நேரம் வரை நீடிக்கும். இந்த தேர்வை முடிக்க இரண்டு நாட்கள் வரை ஆகும். இந்த தேர்வில் எண்கணிதம், உயிரியல், வேதியியல், இயற்பியியல் போன்ற பாடங்களில் தான் கடினமான கேள்விகள் கேட்கபடுவதுவாக சொல்லப்படுகிறது. இந்த கௌகா தேர்வு தான் மிகவும் சவலான தேர்வாக கருதப்படுகிறது.
2. மாஸ்டர் சோமிலியர் டிப்ளமோ தேர்வு (Master Sommelier Diploma Exam):
மாஸ்டர் சோமிலியர் டிப்ளமோ தேர்வு மாஸ்டர் சோமிலியர்ஸ் நீதிமன்றத்தால் நடத்தப்படுகிறது. இந்த தேர்வு ஒயின் தயாரிப்பாளர் நிபுணருக்காக நடத்தப்படும் ஒரு தேர்வு ஆகும். கோட்பாடு, சேவை, குருட்டு சுவை என மூன்று கட்டங்களாக இந்த தேர்வு நடத்தப்படுகிறது. ஒரு நிபுணர் தேர்வில் வெற்றி பெறுவதற்கு இந்த மூன்று கட்டங்களாக நடைபெறும் தேர்வில் வெற்றி பெற வேண்டும். இதில் மூன்றாவது கட்டமாக நடைபெறும் தேர்வுதான் கடினமானது.
இந்த தேர்வில் 25 நிமிடங்களில் 6 மது சோதனை செய்ய வேண்டும். இந்த தேர்வில் அதிகப்படியாக 10% மாணவர்கள் தான் தேர்ச்சி பெறுகின்றனர். அதவாது கடந்த 50 ஆண்டுகளில் 274 மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்று உள்ளனர். எனவே இது கடினமான தேர்வுகளில் ஒன்றாக உள்ளது.
ALSO READ >வீட்டில் இருந்தே ஆன்லைன் வேலை பாக்குறீங்களா? பயனுள்ள சில குறிப்புகள் இதோ…
3. யுபிஎஸ்சி தேர்வு (UPSC Exam):
யு.பி.எஸ்.சி என்பது யூனியன் பப்ளிக் சர்விஸ் கமிசன். இந்தியாவில் சிவில் சர்விஸ் நிர்வகிப்பது இந்த தேர்வு என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா முழுவதும் ஒரு முக்கியமான தேர்வாக பார்க்கபடுவது இந்த யு.பி.எஸ்.சி தேர்வுதான். இந்தியாவின் உயர் அதிகாரிகளான IPS, IAS, IFS போன்ற உயர் அதிகாரிகளை தேர்வு செய்ய நடத்தப்படும் ஓர் தேர்வு முறையாகும். இந்த தேர்வு மூன்று பாகங்களாக நடத்தப்படும். முதல் பகுதி ப்ரிலிம்ஸ். இரண்டாம் பகுதி மெயின்ஸ். மூன்றாம் பகுதி நேர்காணல். தேர்வில் கலந்து கொள்ளும் நபர்களில் குறைந்த விகிதம் மட்டுமே தேர்வில் தேர்ச்சி பெறுகின்றனர். இந்த தேர்வில் கலந்துகொள்ளும் லட்சக்கணக்கான விண்ணப்பதாரர்களில் 0.1 முதல் 0.4 சதவீதம் பேர் மட்டுமே தகுதி பெறுகின்றனர். எனவே இந்த தேர்வு கடினமான தேர்வுகளில் ஒன்றாக உள்ளது.
4. சிஸ்கோ சான்றளிக்கப்பட்ட இணையப்பணி நிபுணர் (CCIE-Cisco Certified Internetworking Expert):
இந்த CCIE தரவு சிஸ்கோ மூலம் நேட்வோர்கிங் நிபுணர்களுக்கு நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்று வழங்கப்படும் சான்றிதழ் உலகம் முழுவதும் ஏற்றுகொள்ளப்படும். இந்த தேர்வு இரு நிலைகளில் நடத்தபடுகிறது. அவை எழுத்து மற்றும் ஆய்வக தேர்வுகள் என இரு தேர்வுகள் உள்ளன. இதில், ஆய்வக தேர்வு மட்டும் 8 மணி நேரம் நீடிக்கும். முதல் பகுதியில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அடுத்த கட்டத்திற்கு தகுதி பெறுவார்கள். இதனால் இது மிகவும் கடினமான தேர்வாக கருதப்படுகிறது.
ALSO READ >நீங்கள் படிக்கும் போது கவனச்சிதறல் ஏற்படுகிறதா? இதோ அதற்கான தீர்வுகள்…
5. மென்சா தேர்வு (Mensa):
மென்சா சொசைட்டி என்பது உயர்ந்த மக்களைக் கொண்ட ஒரு உலகளாவிய IQ சமூகமாகும். மென்சா IQ சோதனையானது உலகின் மிகவும் கடினமான IQ சோதனையாகும். இந்த தேர்வில் 98 சதவீதம் மதிப்பெண் எடுத்தால் மட்டுமே இந்த தேர்வில் வெற்றி பெற முடியும். IQ சமூகத்தில் இணைய முடியும்.
இந்த மென்சா தேர்வானது உலகின் மிகவும் பழமையான IQ சமூகமான MENSA-ல் உறுப்பினர்களாக சேர்வதற்கு நடத்தப்படும் ஒரு தேர்வாகும். இதற்கான வயது வரம்பு ஏதும் கிடையாது.
6. ஆல் சோல்ஸ் பிரைஸ் பெல்லோஷிப் தேர்வு(All Souls Prize Fellowship Exam):
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தால் ஆண்டுதோறும் நடத்தப்படும் ஒரு தேர்வு முறைதான் ஆல் சோல்ஸ் பிரைஸ் பெல்லோஷிப் தேர்வு. இந்த தேர்வில் ஒவ்வொரு விண்ணபதாருக்கும் நான்கு தாள்கள் இருக்கும். இந்த தேர்வின் கால நேரம் 3 நேரம் வரை வழங்கப்பட்டுள்ளது. பங்களிக்கும் விண்ணப்பதார்களில் ஒன்று அல்லது இரண்டு நபர்கள் மட்டுமே தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த தேர்வில் மனித நேய கேள்விகள் இடம் பெறும். தேர்வில் கொடுக்கப்படும் தலைப்பில்ஒரு நீண்ட கட்டுரையாக எழுத வேண்டும்.
ALSO READ >குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்க பெற்றோர்களுக்கு நச்சுனு சில டிப்ஸ்..!
7. பட்டய நிதி ஆய்வாளர்(CFA)தேர்வு:
CFA என்பது Chartered financial analyst.பட்டய நிதி ஆய்வாளர் சோதனை, நிதி துறையில் மிகவும் கடுமையான தேர்வாக கருதப்படுகிறது. இந்த தேர்வு மூன்று நிலைகளில் நடைபெறும். ஒவ்வொரு நிலையிலும் 240 கேள்விகள் கொண்ட 6 மணி நேர சோதனை நடைபெறும். குறைந்தபட்சம் ஒரு பட்டயதாரர் ஆக 4 ஆண்டுகள் தேவைப்படும். இப்போது உலகம் முழுவதும் 1.33 லட்சம் ஊழியர்கள் மட்டுமே உள்ளனர். இந்த தேர்வில் வெற்றி பெற்றவர்கள் உலகின் மிகவும் மதிப்பு மிக்க நிறுவனங்களில் பணிபுரிகின்றனர்.
8. JEE-ADVANCED தேர்வு:
ஜேஇஇ என்பது இந்திய தொழில்நுட்ப கலக்கத்தால் பொறியியல் படிப்பிற்கான நுழைவு தேர்வாக அறிவிக்கப்பட்டது. IIT-யில் படிக்க விரும்பு மாணவர்கள் JEE advanced எனப்படும் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இவை இரண்டு தாள்களை கொண்டது அவை அனைத்தும் குறிக்கோள் வகையாக இருக்கும். இதற்கு 3 மணி நேரம் கால அவகாசம் வழங்கப்படுகிறது. இந்தியாவில் உள்ள பெரும்பாலான மாணவர்கள் இந்த தேர்வை எழுதினாலும் குறைந்தபட்ச மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி அடைகின்றனர்.
9. GRI தேர்வு:
இந்த தேர்வு அமெரிக்க பள்ளிகளில் சேர்க்கைக்காக நடத்தப்பட்டு வருகிறது. அமெரிக்க பள்ளிகளில் சேரவிரும்பும் மாணவர்களுக்காக இந்த GRI தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வு பகுப்பாய்வு பிரிவு, பகுத்தறிவு பிரிவு என 6 பிரிவுகளாக உள்ளன. இந்த தேர்வுகள் ஆன்லைன் மற்றும் ஆப்லைன் மூலம் நடைபெறுகிறது. அமெரிக்காவில் உள்ள பட்டதாரி பள்ளிகளில் சேர இந்த தேர்வில் அதிக மதிப்பெண் தேவை என்பதால் இவை கடினமான ஒன்றாக உள்ளது.
ALSO READ >புரிந்து படிப்பது எப்படி? படித்ததை நினைவில் வைத்து கொள்வது எப்படி?
10. பொறியியல் பட்டதாரி திறன் தேர்வு (கேட் தேர்வு – GATE Exam):
GATE தேர்வு என்பது பொறியியல் பட்டதாரி திறன் தேர்வு ஆகும். GATE முதுகலை பட்டப்படிப்பு அல்லது பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் பொறியியல் பட்டதாரிகளுக்கு நடத்தப்படும் ஒரு தேர்வு முறையாகும். கேட் தேர்வு எழுவதுவதன் மூலம் அவரது அறிவுத்திறனும், செயல்திறனும் எவ்வாறு செயல்படுகிறது என்பதை அறிய ஒரு வாய்ப்பாக இருக்கும். IIT மற்றும் எம்.டெக் படிப்புகளில் சேர கேட் மதிப்பெண் மிகவும் கட்டாயமான ஒன்று. இதனால் இந்த தேர்வு கடினமான தேர்வுகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
RECENT POSTS IN JOBSTAMIL.IN
- Get Ready for the UPSC Recruitment 2023: Apply for Jobs in All Over India – Apply at upsc.gov.in…
- Don’t Miss Out on WBHRB Recruitment 2023: Apply Now for 146 Vacancies – A Chance to Earn Up to Rs.92,100/-PM…
- பத்தாவது (10th) படித்தவரா நீங்க? உங்களுக்குத்தான் ரயில் சக்கர தொழிற்சாலையில் 192 வேலைகள் அறிவிப்பு!
- Secure Your Future with Odisha Police Recruitment 2023: 200 Jobs with a Salary Up to Rs.29,750/-PM | Apply Soon…
- Jobs Opening for Various Posts in NFDC Recruitment 2023 | Monthly Salary Rs.1,00,000/- | Apply Now @ www.nfdcindia.com