இன்று முதல் ஆவினில் ‘பர்புள்’ கலர்ல பால் பாக்கெட் வாங்கலாம்! இதுல என்ன ஸ்பெஷல் தெரியுமா? உடனே படிங்க!

நமது நாட்டில் பொதுமக்களின் மிகவும் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் காணப்படுகிறது. மேலும் நமது அன்றாட வாழ்க்கையில் இவைகள் முக்கிய பங்கு வகிக்கின்றது.

இன்று முதல் ஆவினில் பர்புள் கலர்ல பால் பாக்கெட் வாங்கலாம்

தமிழ்நாட்டில் ஆவின் பால் நிறுவனமானது தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வருகின்றது. மேலும் இந்த ஆவின் நிறுவனமானது தமிழகமெங்கும் பால் பாக்கெட்டுகளை லிட்டர் அளவுக்கு ஏற்ப விற்பனை செய்கிறது. தொடர்ந்து லிட்டருக்கேற்ப நீலநிறம், இளஞ்சிவப்பு, ஆரஞ்சு மற்றும் பச்சை போன்ற நான்கு விதமான வண்ணங்களில் பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனைய செய்யப்படுகிறது.

அதுவுமல்லாமல் ஆவின் பால் நிறுவனமானது பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு அடித்தட்டு மக்களின் சூழ்நிலைக்கேற்றவாறும் அனைத்து தரப்பு மக்களின் நன்மதிப்பை பெறவும் பால் விலையை குறைத்து விற்பனை செய்கிறது. அதுவுமல்லாமல் தனியார் பால் பாக்கெட் நிறுவனத்தின் விலையை விட ஆவினுடைய விலை மலிவாக இருக்கின்றது. இதனால் எல்லா தரப்பு மக்களும் இந்த பாலை வாங்கி உபயோகிக்கின்றனர்.

அதுமட்டுமல்லாது இதன் வண்ணங்களைப் பொறுத்து சமன்படுத்தப்பட்ட பால் மற்றும் கொழுப்பு நிறைந்த பால் என வகுக்கப்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து ஆவின் பால் நிறுவனமானது மற்ற வண்ணங்களைப் போலவே தற்போது ஒரு புதிய நிற பால் பாக்கெட்டினை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது ஆவினில் பர்புள் நிற பால் பாக்கெட்டை அறிமுகம் செய்து வைத்திருக்கிறது.

இந்த பர்புள் நிற பால் பாக்கெட்டில் வைட்டமின் A மற்றும் D ஆகியவைகளும் 3.5 சதவிகித அளவுக்கு கொழுப்பு சத்துக்களும் நிறைந்திருக்கிறது. தொடர்ந்து இதனுடைய முதற் கட்ட விற்பனையை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களில் துவங்கியிருக்கிறது.

இந்த பர்புள் நிற பால் பாக்கெட்டானது அரை லிட்டர் அளவிற்கு இருக்கின்றது. மேலும் ரூ. 22 என இதனுடைய விலையை நிர்ணயித்திருக்கின்றனர்.


RECENT POSTS IN JOBSTAMIL.IN