உலக அளவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் ஒன்றாக சீனா உள்ளது. ஆனால், தற்பொழுது அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளின் பட்டியலில் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முந்தியுள்ளதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் சீன அரசு பிறப்பித்த ஒரு குழந்தை என்ற சட்டம்தான். இதன் காரணமாக சீனாவில் பிறப்பு விகிதமானது பலமடங்கு குறைய தொடங்கியதால் இளைஞர்களின் எண்ணிக்கை குறைவாகவும் முதியவர்களின் எண்ணிக்கை அதிகமாகவும் மாறியது.
இந்நிலையில், இதன் விளைவாக சீன அரசு கடந்த 2021 ஆம் ஆண்டு தம்பதிகள் மூன்று குழந்தைகளை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவித்தது. அதன்பிறகு சீனாவில் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தில் மாற்றம் ஏற்படாததால், குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க தற்பொழுது மீண்டும் ஒரு புதிய அறிவிப்பை சீன அரசு அறிவித்துள்ளது. அதன்படி, சரியான வயதில் திருமணம் செய்து கொண்டு குழந்தைகளை பெற்றுக்கொள்வதை ஊக்குவிக்கும் விதமாக ரூ.1000 யுவான் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. அதிலும் குறிப்பாக 25 வயது அல்லது அதற்கும் குறைவான வயதில் திருமணம் செய்துகொள்ளும் இளம்பெண்களுக்கு ரூ.1000 யுவான் (இந்திய மதிப்புப்படி 11,500) வழக்கப்படும் என்று சாங்ஷான் கவுண்டி அறிவித்துள்ளது.
Also Read : திடீரென பொதுமக்களின் வங்கி கணக்கில் போடப்பட்ட ரூ.1 லட்சம்..! மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்த பொதுமக்கள்!!