இந்த பிப்ரவரி மாதத்தில் அப்ளை பண்ண கூடிய TNPSC-யின் வேலைவாய்ப்புகள் என்னென்ன தெரியுமா? அனைத்து விவரங்களும் இதோ..! www.tnpsc.gov.in

தமிழக அரசு மக்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கும் வகையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் புதிய பணியிடங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி, வேலை தேடும் இளைஞர்களுக்கு உதவும் வகையில் நடப்பு மாதம் அதாவது பிப்ரவரி மாதத்தில் TNPSC-யில் விண்ணப்பிக்க வேண்டிய அரசு வேலைவாய்ப்புகள் பற்றிய அறிவிப்பை இந்த பதிவில் வழங்கி உள்ளோம். இதன் மூலம் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்து பயன்பெற முடியும்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) பிப்ரவரி மாதத்திற்கான Road Inspector, Librarian, Agricultural Officer, TNPSC Tourist Officer ஆகிய பணிகளுக்கென மொத்தம் 889 காலிப்பணியிடங்களை குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆகவே, உங்கள் தகுதிக்கேற்ப பணியை தேர்வு செய்து உடனே விண்ணப்பிக்க விரையுங்கள். காலதாமதமாக வரும் விண்ணப்பங்களை TNPSC ஏற்றுக்கொள்ளாது.

february month 2023 latest updates @ www.tnpsc.gov.in

www.tnpsc.gov.in Do you know what are the TNPSC jobs that you can apply for this February Here are all the details

தமிழ்நாடு அரசு வேலைகள்

TNPSC RECRUITMENT 2023 FOR 761 ROAD INSPECTOR POSTS

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில் காலியாக உள்ள 761 Road Inspector (சாலை ஆய்வாளர) பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு கடந்த ஜனவரி மாதம் 13 ஆம் தேதி வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி, காலியாக உள்ள Road Inspector வேலைக்கு விண்ணப்பிக்க I.T.I. Certificate in Civil Draughtsmenship-ல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதில் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

முழு விவரங்களையும் அறிந்துகொள்ள > க்ளிக் பண்ணுங்க


TNPSC RECRUITMENT 2023 FOR 35 Librarian POSTS

ஒருங்கிணைந்த மாநில நூலகத்தேர்வுகள் மூலம் Interview posts / Non-Interview Posts உள்ளிட்ட பணிகளுக்குக்கென மொத்தம் 35 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்புகள் கடந்த ஜனவரி 30 ஆம் தேதி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் (TNPSC) வெளியிடப்பட்டுள்ளது. இந்த காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Master’s Degree படித்திருக்க வேண்டும். இதில் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு OMR/Computer Based Test (CBT) Method மற்றும் Certificate Verification மூலம் தேர்வு செய்யபாடுவார்கள்.

முழு விவரங்களையும் அறிந்துகொள்ள > க்ளிக் பண்ணுங்க


TNPSC RECRUITMENT 2023 FOR Agricultural OfficeR POSTS

TNPSC வெளியிட்ட அறிவிப்பின்படி, Agricultural Officer, Assistant Director of Agriculture, Horticultural Officer ஆகிய பணிகளுக்கென மொத்தம் 93 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணியிடங்களுக்கான மாத சம்பளம் ரூ.37,700/- முதல் ரூ.1,38,500/- வரை வழங்கப்படும். மேலும் இதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 10.02.2023 ஆகும்.

முழு விவரங்களையும் அறிந்துகொள்ள > க்ளிக் பண்ணுங்க


TNPSC RECRUITMENT 2023 FOR Tourist Officer POSTS

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) தமிழ்நாடு பொதுப் பணியில் சுற்றுலா அலுவலர் (TNPSC Tourist Officer) பதவிக்கென மொத்தம் 03 காலிப்பணியிடங்களை அறிவிவித்துள்ளது. இதில் ஆர்முள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

முழு விவரங்களையும் அறிந்துகொள்ள > க்ளிக் பண்ணுங்க


RECENT POSTS IN JOBSTAMIL.IN

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here